உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் உலகிலேயே மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய தரைத்தள வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் முழுவதுமாக மின்காந்த புலத்தால் இயக்கப்டுகிறது. இதனை சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரித்துள்ளனர். இந்த ரயிலானது இயக்கப்படும்பொழுது தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செயல்படுகிறது.
மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இதனை தயாரித்துள்ளனர். அதுவும் குறிப்பாக பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரை உள்ள 1000 கி.மீ. தூரத்தை இந்த மின்காந்த ரயிலின் மூலமாக 2.5 மணி நேரத்தில் செல்ல முடியும். இதே இடங்களுக்கு விமானம் வழியாக சென்றால் 3 மணி நேரமும், ரயில் வழியாக சென்றால் 5.5 மணி நேரமும் ஆகும்.
அதனால் சீனாவில் அறிமுகப்படுத்திய இந்த அதிவேக ரயில் பயணத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் 37,900 கி.மீ தூரம் வரை இதன் சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…