உலக மகளிர் தினம்!!!!

Default Image

அமெரிக்காவில் 18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டும் வேலை செய்து வந்தனர். வீட்டுவேலைகளை பார்ப்பதற்காக மட்டும் பெண்களை வீட்டிலே இருந்தனர்.

பல பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தராமல் மறுக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கம் மற்றும் தொழிற்சாலை போன்ற இடங்களில் பெண்களுக்கு 1857-ம் ஆண்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என உலகத்திற்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை வாய்ப்பு கிடைத்ததே தவிர, குறைந்த ஊதியம் பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இதனால் பெண்கள்  ஆண்களுக்கு நிகரான  ஊதியம் வழங்க வேண்டும் என்று  குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை அரசு  ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம்  சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர்கள் .

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே  மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்பு பல தடங்கல் காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் 1920-ம் ஆண்டு நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா.ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்