கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ளும் உலக பெண் தலைவர்கள்.!

Default Image

அலட்சியப்படுத்திய தலைவர்கள் மத்தியில் கொரோனாவை தைரியமாக எதிர்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் பெண் தலைவர்கள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு வல்லரசு நாடுகள் மிரண்டு இருப்பதை அனைவராலும் அறிய முடிகிறது. ஆனால் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் தைரியமான முடிவுகளால் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை தொடக்கத்தில் வதந்தி என்று கூறினார். இதையடுத்து ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையும் அலட்சியப்படுத்தினார். அதுபோன்று பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் கொரோனாவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறி வந்தார்.

இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய தலைவர்களுக்கு மத்தியில் அதிரடி உத்தரவுகளால் அதனை மிகவும் சாதுரியமாக கையாண்டு வருகிறார்கள் உலகில் உள்ள பெண் தலைவர்கள். சீனாவின் கொரோனா வைரஸ் குறித்து தகவல் வந்த அடுத்த நாளிலே தைவான் வரும் விமானங்களுக்கு தடை விதித்தார் அந்நாட்டு பிரதமர் சாய் இங்-வென், தற்போது தைவான் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உள்ளது. தங்கள் நாட்டு தேவைக்குபோக ஐரோப்பிய நாடுகளுக்கு முகக்கவசங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.

இதையடுத்து சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ள நியூசிலாந்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைய ஆரம்பத்திலேயே தடை விதித்தார் அந்நாட்டு பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், அவரது இந்த அதிரடி நடவடிக்கையே கொரோனா அதிகம் பரவாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது. அங்கு 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளை பெண் தலைவர்களே ஆளுகிறார்கள். கொரோனாவின் தாக்கத்தை புரிந்துகொண்ட முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுத்ததால் கொரோனா வைரஸை பெரும் அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் பதற்றமின்றி சரியான முடிவுகளை பெண் தலைவர்களே எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்