நீயின்றி உடல் இல்லை, உயிர் இல்லை, ஏன் உலகமும் இல்லை. இன்று உலக நீர் தினம்(22.03.2022)..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகில் தற்போது நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர்ப் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும் விழிப்புணர்வுக்காகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் இந்நாள் குறித்து மக்களிடையே விரிவாகப் பிரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதக்குலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இந்த தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட இதன் விளைவே. இது ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மழை பொழிய அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீரின் அருமையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். இன்று உலக நீர் தினம் மார்ச் 22.
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)