உலக தண்ணீர் தின சிறப்பு தொகுப்பு… நீர் மணிதனின் ஆணி வேர் என்பதை மனிதன் அறிய வேண்டிய நாள்…

Default Image

இன்று நவீன மயமாக்குதல் என்ற  பெயரில், உலகின் இயற்கை வளங்களை 90 சதவீதம் அழித்துவிட்டு, அதன் விளைவாய் தோன்றும் விளைவுகளான பல்வேறு பருவ கால மாறுபாடு காரணமாக பூமியில் மாழை பொய்த்துப்போய்விட்டது. இங்கு கிடைக்காத தண்ணீரை  செவ்வாய் கிரகத்தில் தேடிக் கொண்டு இருக்கிறான் இன்றைய  மனிதன்.நீர் சூழ் உலகாக மூன்று பங்கு கடல் இருந்தும், அதனை குடிநீராக்கும் சிந்தனையை  விடுத்து, வேற்றுகிரக வாசியை  தேடியே நம் அறிவியல் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டு வருவதால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கின் தீமையை அறிந்த அனைவரும் அதன் பயன்பாட்டை குறைக்க முன்வராதது ஏன்?. அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் அரசு அதன் உற்பத்திக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்ற உயர் சிந்தனை வினாக்கள் எழுகின்றது.  இயற்கையில் கிணறுகள், குளங்களை மூடிவிட்டு, செயற்கை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி  நீச்சல் அடிக்கிறோம். என் அப்பா நீரை ஆற்றில் பார்த்தார், நான் நீரை குழாயில் பார்க்கிறேன். என் மகன் நீரை எதில் பார்ப்பானோ என்ர கேள்வி அனைவரையும் சிந்திக்க வைக்கும் கேள்வியாகும். உலகளவில் அன்றாட தேவைக்கான சுத்தமான குடிநீர் இல்லாமல், 400 கோடி மக்கள் இன்றளவும் திண்டாடுவதாகவும், அதிலும் குறிப்பாக பல ந்திகள் ஓடும்  இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், இதில், 60 கோடி மக்கள் அதிக வறட்சியான நிலங்களில் வசிப்பதாகவும்   ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடற்ச்சியாக மரங்களை வெட்டுவதால் மழையின்றி அவதிப்படுகிறோம். கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யவில்லை. உலகம் முழுவதும் இயற்கையை அழித்ததன் விளைவாக, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகம் வேகமாக வெப்பமயமாகி வருகிறது.  இந்த உலகம் ஒன்று தான். உலகில் வாழ நீர் வேண்டும். நீரின்றி அமையாது உலகம். எனவே தண்ணீரை தேவை இல்லாமல் வீணாக்கவேண்டாம். சிறு துளி பெருவெள்ளம்!
எனவெ மழை நீரை சேமிப்போம். நீரை சிக்கணமாக பயன்படுத்துவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்