ரூ.37 லட்சம் கட்டணத்தில் பலூனில் விண்வெளி சுற்றுலாப் பயணம்…!

Published by
Edison

ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனிங் நிறுவனமான வேர்ல்ட் வியூ நிறுவனம், பலூன்களைப் பயன்படுத்தி பயணிகளை விண்வெளி சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.

நவீனத்தை நோக்கிய வளர்ச்சியில் விண்வெளி சுற்றுலா பயணம் என்பது சாத்தியமாகி வருகிறது.அந்த வகையில்,உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொண்டநிறுவனம் என்ற பெருமையை திகதி ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அடைந்தது. இதனையடுத்து,அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து முதல் விண்வெளிச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

அதன்பின்னர்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் 4 பேரை கட்டண அடிப்படையில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக திரும்பியது.இன்ஸ்பிரே‌ஷன் 4 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில், அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், ஷிப்ட் 4 பேமண்ட்ஸ் நிறுவனத் தலைவருமான, ஜாரிட் ஐசக்மென் தலைமையிலான 4 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில்,அரிசோனாவைச் சேர்ந்த ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனிங் நிறுவனமான வேர்ல்ட் வியூ(stratospheric ballooning company),பலூன்களைப் பயன்படுத்தி பயணிகளை விண்வெளி விளிம்பிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதன்படி,8 பார்வையாளர்கள் மற்றும் இரண்டு நிறுவன குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை பூஜ்ஜிய அழுத்த அடுக்கு மண்டல பலூனில் ஏற்றி, 1,00,000 அடி உயரத்திற்கு, ஏறக்குறைய 27 கிமீ தொலைவுக்கு அழைத்துச்சென்று  விண்வெளியில் 6 முதல் 12 மணி நேரம் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் பயன்படுத்தப்படும் விண்வெளி காப்ஸ்யூல் பலூன் விமானத்தில் உணவு, இணைய தரவு இணைப்பு, எர்த்-வியூ கேமராக்கள் மற்றும் நட்சத்திர பார்வை தொலைநோக்கிகள் மற்றும் தனிப்பட்ட பார்வைத் திரைகள் ஆகிய வசதிகள் கிடைக்கும்.இதில் பயணம் செய்ய ஒரு இருக்கைக்கு ரூ.37.56 லட்சம் (50,000 டாலர்) கட்டணமாக செலுத்த வேண்டும்.

நிறுவனத்தின் முதல் வணிக விமானப் பயணம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளன.இதற்காக,கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா அதன் முதல் விண்வெளித் துறைக்கான இடமாக தேர்வாகும் என்று கூறப்படுகிறது.

 

Published by
Edison

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

33 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

59 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

2 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

3 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

4 hours ago