உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் :3 விக்கெட் இழப்பில் எடுத்த ரன்கள்..லைவ் ..!.
இந்திய அணி 55 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து உள்ளனர்.
சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கி பார்ட்னர்ஷிப் மூலம் 62 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர். பின்னர், கைல் ஜேமீசனிடம் ரோஹித் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதனைத் தொடர்ந்து,கில் 28 ரன்கள் எடுத்த பிறகு நீல் வாக்னரிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து,தற்போது களத்தில் விராட் கோலி, ரஹானே இருவரும் விளையாடி வருகின்றனர்.அதன்படி,விராட் கோலி 94 பந்துகளுக்கு 35 ரன்கள், ரஹானே 54 பந்துகளுக்கு 13 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.