ரேடியோ என்ற சொல்லானது ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. இந்த வானொலியை மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி கண்டு பிடித்தார். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர், கம்பியில்லா தகவல்தொடர்பு முறை மற்றும் ´மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கினர். இகந்த கண்டுபிடிப்பிற்காக 1909ஆம் ஆண்டு இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் மார்கோனியுடன் இணைந்து பெற்றார்.
உலகில், தகவல்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது. இந்த சிறந்த சாதனமான வானொலியை சிறப்பிக்க பிப்ரவரி (13.02.2020) இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அதாவது யுனெசுக்கோ அமைப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.
உலக அளவில் வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு அளவில் வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முதலாவது உலக வானொலி நாள் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். எனவே வானொலி சொந்தங்கள் அனைவருக்கும் தினச்சுவடின் சார்பாக இனிய உலக வானொலி நாள் நல்வாழ்த்துகள்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…