இசைஞானி இளையராஜாவை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்.!
நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு.
தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அழைக்கப்படும் இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தீ நகரில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இளையராஜா ஸ்டுடியோ தொடங்கியதை தொடர்ந்து ரஜினி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் நேரடியாக ஸ்டுடியோவிற்கு சென்றனர்.
இவர்களை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் சென்னை தீ நகரில் இளையராஜா ஸ்டுடியோ-விற்கு சென்று மரியாதை நிமிர்த்தமாக இளையராஜாவை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.