சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று(12.03.2020) இந்த தினம் கடைபிடிக்கப்ப்டுகிறது. சிறுநீரகம் உடலின் முக்கியமான உடற்பாகங்களில் ஒன்று. இது ரட்தத்தை சுத்திகரித்து சிறுநீரை பிரித்தெடுத்து வெளியே அனுப்புகிறது. உடல் உஷ்ணம் காரணமாகவும், தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றனர். இது சிறுநீர்பையில் சேர்ந்து சிறுநீரை அடைக்கிறது. சிறுநீரக நோயானது பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடலில் சுரக்கக் கூடிய சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற மினரல் மற்றும் வேதிப்பொருள்களை சரியான அளவில் சமநிலை செய்வதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. உதாரணமாக சோடியத்தின் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மனிதனின் மனநிலை பாதிப்படையும். அதேபோல் பொட்டசியம் அதிகமானால் இதயம் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மாறுபடும். காசியம், பாஸ்பரஸ் அதிகமானால் எலும்பு மற்றும் பற்களை பலவீனமாக்கும். இந்த அளவை சமநிலை செய்வது சிறுநீரகங்கள் தான். நாட்பட்ட சிறுநீரக நோயினால் உலகளாவிய அளவில் சுமார் 195 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் இறப்பதற்கு காரணமான நோய்களில் நாள்பட்ட சிறுநீரக நோய் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 14 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்நோய் பெண்களை எளிதாக தாக்குகிறது. நாம் உயிர் வாழ, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பல நன்மைகளைச் செய்யக்கூடிய சிறுநீரகத்திற்கு நாம் செய்ய வேண்டிய பதில் கடமை ஒன்றே ஒன்றுதான். நன்கு சுத்தமான நீர் அருந்துவது. இதை நீங்கள் சரியாகச் செய்தாலே சிறுநீரகம் ஆரோக்கியமடையும். அதன் வேலையையும் சிறப்பாகச் செய்யும்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…