இந்த வார்த்தையை மெய்யாக்கும் விதமாக ஈரான் தனது ஏவுகனை தாக்குதலால் அமெரிக்க விமான தளத்தை அதேபோல் சிதைத்துள்ளது. ஒந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக தற்போது நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”அனைத்தும் நன்றாக உள்ளது.ஈரான் இராணுவம், ஈராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் வலிமையான மற்றும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பதிவிற்க்கு பதிலாக ஈரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ” நாங்கள் பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ ஈரான் விரும்பவில்லை. ஆனால் எங்களின் மீதான அமெரிக்காவின் தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் மேலும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ள அவர், ”எங்கள் நாட்டுமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன 51-ஆம் பிரிவின்படி, எங்களின் தற்காப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்கா ஈரான் போர் பதற்றம் சர்வதேச அளவில் மேலும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…