பழிக்கு பழி… அமெரிக்க விமான தளத்தை சிதைத்த ஈரான் ஏவுகனைகள்.. போர் மேகம் சூழ்ந்தது….

- கடந்த சில தினங்களுக்கு முன்னால் அமெரிக்க ராணுவ ஏவுகனை தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி கொடூரமாக கொல்லப்பட்டார்.
- இந்நிலையில் இதற்க்கு நிச்சயம் அமெரிக்கா பழிவாங்கப்படும் என்று ஈரான் தரப்பில் பதிலலிக்கப்பட்டது.
இந்த வார்த்தையை மெய்யாக்கும் விதமாக ஈரான் தனது ஏவுகனை தாக்குதலால் அமெரிக்க விமான தளத்தை அதேபோல் சிதைத்துள்ளது. ஒந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக தற்போது நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ”அனைத்தும் நன்றாக உள்ளது.ஈரான் இராணுவம், ஈராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
All is well! Missiles launched from Iran at two military bases located in Iraq. Assessment of casualties & damages taking place now. So far, so good! We have the most powerful and well equipped military anywhere in the world, by far! I will be making a statement tomorrow morning.
— Donald J. Trump (@realDonaldTrump) January 8, 2020
இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் வலிமையான மற்றும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பதிவிற்க்கு பதிலாக ஈரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ” நாங்கள் பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ ஈரான் விரும்பவில்லை. ஆனால் எங்களின் மீதான அமெரிக்காவின் தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் மேலும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
Iran took & concluded proportionate measures in self-defense under Article 51 of UN Charter targeting base from which cowardly armed attack against our citizens & senior officials were launched.
We do not seek escalation or war, but will defend ourselves against any aggression.
— Javad Zarif (@JZarif) January 8, 2020
மேலும் குறிப்பிட்டுள்ள அவர், ”எங்கள் நாட்டுமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன 51-ஆம் பிரிவின்படி, எங்களின் தற்காப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்கா ஈரான் போர் பதற்றம் சர்வதேச அளவில் மேலும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025