மதுபானம் கொடுத்து 50 பெண்களை சீரழித்த WHO ஊழியர்கள்-அதிர்ச்சியில் WHO
உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மதுபானம் கொடுத்து 50 பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் 50 பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளார். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வெடிப்பைச் சமாளிக்க நியமிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் 50 பேர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதியளித்த நிலையில் நியூ ஹுமானிடேரியன் செய்தி நிறுவனம் மற்றும் தாம்ப்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை இது தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக விசாரித்து வருகின்றது. இது தொடர்பாக உறுதியான விசாரணை நடைபெறும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.ஆனால் இந்நிகழ்வானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.