ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்தத் தடை விதித்த – உலக சுகாதார அமைப்பு.!
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு, இதயப்பிரச்னைகள் ஏற்படுவதால் தற்காலிகமாக இந்த மருந்தை பயன்படுத்த WHO தடை விதித்தது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில், இதுவரை உலக அளவில், 5,590,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 347,907 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பாதுகாப்பு அச்சம் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் கூறுகையில் “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை தற்காலிகமாக நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருந்தின் பாதுகாப்பு தரவுகளைக் கண்காணித்து மதிப்பாய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.