சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி.
உலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ பயன்பாடு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவில் WHO வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றிற்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெறும் ஆறாவது தடுப்பூசி என தெரிவித்துள்ளார்.
சினோஃபார்ம் தடுப்பூசியை 45 நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால்,உலக சுகாதார அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்காததால், பல நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தயங்கி வந்தனர். தற்போது சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா தயாரித்துள்ள மற்றொரு தடுப்பூசியான, சினோவாக் தடுப்பூசிக்கும் ஓரிரு நாட்களில் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…