உலக மகிழ்ச்சி தினத்தில் உறுதியேற்போம் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைப்பேன் என்று…

Default Image

கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் நாளை  ஐக்கிய நாடுகள் சபை  உலகம்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி  ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்  ‘உலக மகிழ்ச்சி தினம்’  உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிட்டது . அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில், உலக மக்களின் மகிழ்ச்சியை

  • சுதந்திரம்,
  • சமூக ஆதரவு,
  • வருமானம்,
  • மக்களின் ஆயுட்காலம்,
  • அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை,
  • சமத்துவமின்மை ஆகிய காரணிகளை கொண்டு ஐநா உலக நாடுகளின் மகிழ்ச்சியை கணக்கிட்டுவருகிறது. 

இந்த உலகில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் மட்டுமே எங்கும் எப்போதும் மகிழ்ச்சி தான் நிலைத்து இருக்கும். தேனடையில் தேனீ தேடி சேர்த்து வைத்திருக்கும் தேனைத் மனித இனம் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த நம்மால்  எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மகிழ்ச்சி என்பது  ஒன்றும்  வெளியில் இல்லை. அது அவரவர் உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது. மனதால் நிறைந்தது, மனிதத்தால் மலர்ந்தது. மனம் மகிழ்வுடன் அமைய ஒவ்வொருவரும் இந்த தினத்தில் உறுதிகொள்ள வேண்டும். நான் எப்பொழுதும் வருந்த மாட்டேன். மன மகிழ்வுடன் இருப்பேன், எனக்காக இல்லாவிட்டாலும் என் குடும்பத்திற்க்காக மகிழ்வுடன் இருப்பேன். குழந்தைகளிடம் நேரம் செலவு செய்ய்வேன் என உறுதி கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் மனம் தெளிந்த நீரைப்போல சலனம் இல்லாமல் சிறப்பாக அமையும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்