இதுதான் உலகின் அதிவேக கார்.. பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara!

Default Image

உலகின் அதிவேகமான காரான “புகாட்டி சீரானின்” சாதனையை இந்த புதிய “SSC Tuatara” முறியடித்துள்ளது. 

உலகின் அதிவேகமான கார் என்றாலே நாம் அனைவரும் கூறுவது, புகாட்டி சீரான். அது, மணிக்கு 482.80 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயும். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க எந்த காராலும் முடியவில்லை. இந்த சாதனையை முறியடிக்க யாரேனும் வருவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோ என்ட்ரி போல நுழைந்தது, எஸ்.எஸ்.சி துடாரா (SSC Tuatara).

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் ஒன்று உலகின் அதிவேக காரை தயாரித்து அசத்தியிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல உலக சாதனைகளையும் தகர்க்த்தெறிந்துள்ளது. வாஷிங்டன் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SSC நார்த் அமெரிக்கா என்ற நிறுவனம், இந்த காரை உருவாகியுள்ளது. அதில் சிறப்பாக பேசப்படுவது என்னவென்றால், உலகின் அதிவேகமான காரை 24 பேர் மட்டுமே கொண்ட  குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

முற்றிலும் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பை கொண்ட எஸ்.எஸ்.சி துடாரா, ட்வின் டர்போ 5.9 லிட்டர் வி-8 எஞ்சினை கொண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 1,750-hp பவரை வழங்குகிறது. அதனை இயக்க 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இக்காரின் எடை 1,247 கிலோவாகும்.

இந்த காரின் வேகத்தை கணக்கிடும் சோதனை, லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நடைபெற்றது. அந்த காரை கார் பந்தைய வீரர் ஆலிவர் வெப் என்பவர் இயக்கினார். அப்பொழுது இந்த கார், மணிக்கு 508.73 கிமீ வேகத்தில் சென்றது.

இது, உலகின் வேகமான கார் என்ற சாதனை படைத்ததை மட்டுமின்றி, மேலும் மூன்று சாதனைகளும் தன்வசப்படுத்தியது. உலகின் அதிவேகமான கார் என்பதால், மொத்தமாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை, 1.6 மில்லியன் அமெரிக்க டாலராகும். (இந்திய விலைப்படி 11.79 கோடியாகும்).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்