இவர்தான் உலக ஃபேமஸ் லவ்வர் பாய்! நம் காதலை வெளிப்படுத்த இவரிடம் தான் டிப்ஸ் கேட்க வேண்டும்!

Default Image

கனடா நாட்டை சேர்ந்த ஜான் நிவெல்லி மற்றும் டிஜே ஸ்குரிஸ்  இருவரும் காதலர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை, 2 குழந்தைகள் உள்ளனர். இதில் டிஜே ஸ்குரிஸ் வேலைக்கு சென்றுவிடுவார். ஜான் நிவெல்லி வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிப்பது, காதலியை கவனிப்பது, பிறகு தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் வேலை செய்வது என வீட்டை கவனித்து வந்துள்ளார்.

இவர் தனது காதலியான டிஜே ஸ்குரிஸை  திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை தனது காதலியிடம் வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்ய அஎண்ணியுள்ளார். அதற்காக ஒரு மோதிரத்தையும் வாங்கியுள்ளார். ஆனால் மோதிரத்தை நேரடியாக அவரிடம் கொடுத்து விடவில்லை.

மாறாக தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் ஒரு புதிய யோசனையில் இறங்கினார். அதாவது அந்த மோதிரத்தை ஒரு பையில் போட்டு அதில் கேரட் விதைகளை தூவி மண்ணில் புதைத்து விட்டார். பின்னர் அதனை வளர்க்கத் தொடங்கினார்.

சரியாக அறுவடை செய்யும் நேரத்தில் தனது காதலியை அனுப்பி கேரட்டை அறுவடை செய்து வர சொல்லியுள்ளார். அப்போது அவரது மனைவி கேரட்டை அறுவடை செய்யும் வேளையில் அந்த கேரட்டில் மோதிரம் இருப்பதை பார்த்துள்ளார். அந்த சமயம் ஜான் நிவெல்லி தனது என்ட்ரியை கொடுத்து அந்த மோதிரத்தை கொடுத்து திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் மிகவும் இம்ப்ரஸ் ஆன டிஜே ஸ்குரிஸ், ஜான் நிவெல்லியின் காதலை ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கேரட் மோதிரத்தை இணையத்திலும் பதிவிட்டிருந்தார். தற்போது இணையத்தில் ஜான் நிவெல்லி தான் உலக ஃபேமஸ் லவ்வர் பாயாக திகழ்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்