மனிதன் தன் வாழ் நாளில் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு முன்னே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே..பிள்ளைக் கனி அமுது தானே.இவையனைத்தும் சேர்ந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தானே.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அம்மாவை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளையும் பின்னாளில் மனைவியையும் நேசிப்பான். வீட்டில் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தட்டிக் கொடுத்து வளர்க்கிறான் தன் குழந்தையை. குடும்ப பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். ‘கண்ணுக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன்,பொத்தி பொத்தி வளர்த்துட்டேன்’ என வயிற்றுக்கு வெளியேயும் கருப்பை சுமந்து வளர்க்கப்படும் குழந்தைகள், குடும்ப கஷ்டங்களை உணர்வதில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட தலை முறைகளின் வலிகள், இன்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நவ நாகரிகத் தலை முறைகளுக்குப் புரியாது தான். குடும்ப உறவுகளின் உன்னதங்களையும்,வலிகளையும் அனுபவிக்கும் குழந்தைகளே பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல மனம் விட்டுப் பேசினால் கூட நோய் விட்டுப் போகும். ‘எனக்கு ஒன்னுனா கேக்குறதுக்கு எங்க தாய் மாமா இருக்காரு’ என்று கெத்து காட்ட முடிவதில்லை இன்று. காரணம் தனிக் குடும்ப அமைப்பு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். கூட்டுக் குடும்ப உறவுகளாலே தான் இந்தப் பழமொழி சாத்தியமாகும். ஆனால் தற்போது குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தை என மிகச்சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. பெற்றோர்களும் தன் குழந்தைகளை மாமியார், நாத்தனார் இல்லாத குடும்பத்தில் திருமணம் செய்துவைக்கவே விரும்புகின்றனர். இதனால் குடும்ப அமைப்பே சிதைந்து போகிறது. இப்படி பெற்றோரை கைவிட்டுவிட்டு எப்படி அவர்களால் மகிழ்வுடன் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. பெற்றோர்களை முதியோர் இல்லங்களிலும் தெருவிலும் விட்டுவிட்டு இன்று மகிழ்வுடன் இருக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம். அவரவர் கர்ம பலண்களை அவரவர் அடைந்தே தீர்வோம்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…