இன்று உலக பால் தினம்! பாலகர்களின் பசி தீர்க்கும் பால் தினம் பிறந்த வரலாறு!
பால் இன்று நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பால் குழந்தைகளின் பசி தீர்ப்பதற்காக மட்டுமல்லாது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலை உபயோகிக்கின்றனர். குழந்தை பிறந்து தாய்க்கு பால் கொடுக்க இயலாத நிலையில், பச்சிளம் குழந்தையின் பசி தீர்ப்பதும் இந்த பால் தான்.
இன்று (ஜூன்-1)-ம் தேதி உலகம் முழுவதும் உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதன்முதலாக 2001-ம் ஆண்டு, உலகெங்கும் பல நாடுகளின் பங்களிப்புடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, இந்நாளில் ஒவ்வொரு ஆண்டும், பால் மற்றும் பால்துறை நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகளை விளம்பரபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் ஜூன்-1ம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தால் பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி மக்கள் அறிந்துகொள்வதற்கு உதவியாய் இருக்கிறது.