FIFA WORLD CUP 2018: 24 வருடங்களுக்கு பின்னர் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வீடன் அணி!சுவிட்சர்லாந்து ஆணி வெளியேறியது!
உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது.
இன்று இரவு செஸ் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதியது.
ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் ஆட்டம் தொடங்கியது.ஆட்டத்தின் பாதி நேரம் வரை இரு அணி வீரர்களும் போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.எனவே ஆட்டம் 0-0 என்ற கணக்கில் உள்ளது.பின்னர் ஸ்வீடன் அணி தந்து முதல் கோலை அடித்துள்ளது.இதன் மூலம் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் சுவிட்சர்லாந்து அணி கடைசிவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இந்நிலையில் ஆட்ட நேரம் முடிந்ததால் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது.இதனால் ஸ்வீடன் அணி காலிறுதிக்கு முன்னேறியது.சுவிட்சர்லாந்து அணி பரிதாபமாக வெளியேறியது.ஸ்வீடன் அணி 24 வருடங்கள் கழித்து அணி காலிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.