உலகக்கோப்பை ஹாக்கி போட்டி…!தென்னாப்பிரிக்க அணியை பந்தாடிய இந்தியா …! 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி …!
இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.
14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது.16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில், மாலை 5 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம்-கனடா அணிகள் மோதியது.இதில் பெல்ஜியம் அணி 2-1 கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரவு 7 மணிக்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது.இந்தபோட்டியில் இந்திய அணி 5-0 கோல் வெற்றிபெற்றது.