உலககோப்பை ஹாக்கி :முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய பெல்ஜியம் அணி…!
உலககோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், பெல்ஜியம் நெதர்லாந்து அணிகள் இன்று மோதியது. 14 வது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறுகிறது. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியது.
இதில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் 6 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்திய பெல்ஜியம் முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து ஆட்டம் சம நிலையானது.
இதனையடுத்து இந்த உலக கோப்பையில் முதன் முதலாக கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷாட் முறையில் 4 க்கு 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த போட்டியின் முழு நேரத்திலும் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.இதனால் பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.இறுதியாக 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.இதனால் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.முதல் முறையாக பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.