வரலாற்றில் இன்று(15.03.2020)… உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று…

Published by
Kaliraj

சர்வதேச நுகர்வோர் அமைப்பு  என்ற ஒரு அமைப்பு 1960 ஏப்ரல் மாதம் 1ஆம் நாள்  தொடங்கப்பட்டது. இதில் தற்போது  120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்  வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது. 1962ஆம் ஆண்டு  அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  15ஆம் நாள்  இந்த தினம் உருவாக்கப்பட்டது. விய்யாபாரி விற்கும் ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். சந்தையின் முக்கிய எஜமானர் நுகர்வோர் தான். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை. தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு  ஏற்ப சில பொருட்களின் தரம் இருப்பதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். 
பொருட்களை வாங்கும் போது

  • ஐஎஸ்ஐ                      – இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்
  • அக்மார்க்,                – வேளாண்பொருள்களுக்கான தரக்குறியீடு
  • எஃப்பிஓ                      – கனி உற்பத்தி ஆணையம்
  • எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,  – இந்திய்ய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம்

உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிப்பது பார்ப்பது அவசியம். மேலும் அதில்,

  • விலை,
  • உற்பத்தியாளர் முகவரி,
  • காலாவதி தேதி,
  • விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

இந்தியாவின் நிலை:

  • இந்தியாவில் ‘நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019’ கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதில்
  • புதிதாக நுகர்வோர் ஒழுங்குமுறை ஆணையம்,
  • தவறான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் போலி பொருட்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை,
  • புகார் செய்யும் முறையில் தாராளமயம்,
  • வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை,
  • புகார்களுக்கு விரைவில் தீர்வு, வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு பெறும் வசதி,
  • கலப்படத்துக்கு தண்டனை போன்ற பல அம்சங்கள் உள்ளன.

நுகர்வோரின் உரிமைகள்:

நுகர்வோர் உரிமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்  மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நிலையான நுகர்வோர்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்
களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

11 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

12 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

12 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

13 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

14 hours ago