இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு திட்டங்களுக்கு உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டங்கள் பலவிதமான வளர்ச்சி முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்தியாவின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் விவசாயத்தை ஊக்குவித்தல், நாகாலாந்தில் தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதலுக்கு உதவுகிறது.
இந்த நான்கு திட்டங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகள், கல்வி, நீர் வழங்கல் ஆகியவற்றிக்கு உதவுகிறது என்று உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறினார். அங்கீகரிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் 100 மில்லியன் டாலர் சத்தீஸ்கர் உள்ளடக்கிய கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சி திட்டம் மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வகைப்பட்ட மற்றும் சத்தான உணவை வழங்க உதவுகிறது.
இரண்டாவது திட்டம் நாகாலாந்தில் 68 மில்லியன் டாலர் வகுப்பறை, கற்பித்தல் மற்றும் வளங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இந்தியாவின் அணை மேம்பாடு மற்றும் புனர்வாழ்வு திட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்களுக்கும் உலக வங்கி நிதியளிக்கிறது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…