இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பிரதமர் மோடி இரண்டு நாள்களுக்கு முன் மக்களிடையே உரையாற்றும்போது 4- ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் இந்த ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அவ்வப்போது மக்களின் நலனுக்காக முக்கிய நல திட்ட அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை மோடி அறிவித்திருந்தார்.
இந்த திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 3-ஆவது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான அறிவிப்புகளும், நேற்று வேளாண்த்துறை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 81,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிதி இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள், கொரோனா ஒழிப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…