கொரோனாவால் பாதித்த 100 நாடுகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 50,90,157 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,739 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக பல நாடுகள் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.
இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பா வாஷிங்டனில் இருந்து தொலைபேசி வழியாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கொரோனா மற்றும் ஊரடங்கால் உலகமெங்கும் 6 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிடும் என கூறியுள்ளார். இந்த பிரச்சினையில் உலக வங்கி விரைவாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறது. வைரசால் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 100 நாடுகளில் அவசர கால நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக வங்கி 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவி வழங்கும் என்று தெரிவித்தார். இந்த 100 நாடுகள்தான் உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தை தங்களிடம் கொண்டுள்ளன. மீதம் 39 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்ப வேண்டும் என்றால் அதற்காக சுகாதார அவசர நிலையை சமாளிக்க வேண்டும் என்றும் ஏழைகளை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தனியார் துறையை பராமரிக்க வேண்டும். பொருளாதார பின்னடைவை மீட்டெடுக்க வேண்டும். இதுதான் உலக வங்கியின் குறிக்கோள் என குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில்தான் உலக வங்கி 15 மாத காலத்தில் 160 பில்லியன் டாலரை வழங்க போகிறது என்றும் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என கருதினார். சுகாதார, பொருளாதார, சமூக அதிர்வுகளுக்கு திறம்பட பதில் அளிக்கும் வகையில் இந்த திட்டங்கள் நாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…
சென்னை : தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின்…
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல்…