வரலாற்றில் இன்று(13.03.2020)… உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் இன்று…

Published by
Kaliraj

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின்  அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர்ஆட்டிசம்ஸ்பெக்ட்ரம் சின்ரம் என்பதாகும். இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு.

Image result for autism in india

இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒருகோடிக்கும் அதிகமான குழந்தைகள் ஆட்டிசநிலையாளர்களாக இருக்கலாம் என்று சொல்கிறது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இக்குறைபாட்டின் அறிகுறிகள்:

  • தனிமையை விரும்புவது
  • உடல் நலக்குறைவு போன்ற நேரத்தில், பிறரின் அரவணைப்பை விரும்புவதை வெளிக்காட்ட தெரியாதது
  • மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது
  • கூடி விளையாடும்போது, தனக்குரிய தருணத்தை பயன்படுத்திக்கொள்ள தெரியாதது
  • குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பது
  • தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது
  • ஒரு பொருளில், குறிப்பிட்ட ஒரு பாகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது,
  • பேச்சில் தெளிவில்லாமை
  • தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது
  • கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, கைகளை சுழற்றுவது, தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள்
  • அதீத பயம்
  • சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்படுவது
  • தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது
  • சிறுநீர், மலம் கழிக்க பயிற்சி பெறுவதில் சிரமம்

இவற்றில், மூன்று முதல் ஆறு அறிகுறிகளுடன், பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காதது, கண்களை பார்த்து பேசாதது, சிரித்தால் பதிலுக்கு புன்னகைக்காதது போன்ற குறைபாடுகள் இருந்தால், அக்குழந்தைக்கு, “ஆட்டிசம்’ குறைபாடு இருக்க, வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை:

  • இக்குழந்தைகளுக்கு, “ஆக்குபேஷனல்தெரபி’யில், உணர்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை, 6 மாதங்கள் வரை அளிப்பதன் மூலம், அவர்களை, “ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து விடுவிக்கலாம்.
  • ஆக்குபேஷன் தெரபி சிகிச்சையை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
  • இதற்கு கூடுதல் நிதி செலவாகும்.
  • பயிற்சி பெற ஒவ்வொரு முறையும் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.
  • இதனால் அரசு காப்பீடு திட்டத்தில் பயன்பெற மருத்துவமனையில் டி.இ.ஐ.சி. திட்டத்தில் மனநல சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
  • இன்று தமிழக மருத்துவமனையில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது
  • இன்று இந்த குறைபாட்டை அறிந்து கொண்டு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

6 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

7 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

8 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

8 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

9 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

9 hours ago