மன்னிப்பு கடிதத்துடன் சைக்கிளை திருடி சொந்த ஊர் சென்ற தொழிலாளி!
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளை திருடி, மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்று 250 கீ.மீ தொலைவிலுள்ள ஊரை அடைந்த தொழிலாளி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், வெளியூருக்கு சென்ற கூலி தொழிலாளிகள் திரும்பி சொந்த ஊருக்கு வர வழியில்லாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தொழிலாளிகளுக்கு சிறப்பு ரயில்கள் விட்டிருந்தாலும் சிலருக்கு அது தெரிவதில்லை. இந்நிலையில், தற்பொழுது ராஜஸ்தானில் வேலை செய்துவந்தனர் தான் முகமது இக்பால். இவர் பரத்பூரிலுள்ள ராரா கிராமத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது சொந்த ஊரு உத்ர்ப்பிரேதசம்.
ஊரடங்கு நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் இவர் வேலை பார்த்த இடத்திற்கு அருகிலுள்ள சாஹாப் சிங் என்பவற்றின் சைக்கிளை திருடிக்கொண்டு தனது குழந்தையுடன் 250 கீ.மீ தூரத்தை கடந்து சொந்த ஊரை கடந்துள்ளார்.
ஆனால், சாஹாப் சிங் அவர்களின் சைக்கிளை எடுத்துக்கொண்டதால் அவருக்கு மன்னிப்பு கடிஹம் எழுதி வைத்து வந்துள்ளார். அதில், நான் ஒன்றுமில்லாத கூலி தொழிலாளி. எனக்கு அறிவு திறன் கொண்ட மகன் உள்ளன. தொடர் ஊரடங்கால் ஆன் இங்கேயே மாட்டி கொண்டேன்.
உங்களது சைக்கிளை எடுத்து கொள்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு குற்றவாளி தான் உங்கள் முன்பு, இருப்பினும் எனது சொந்த ஊரை அடைய வேறு வழி தெரியவில்லை என எழுதி வைத்துள்ளார்.