10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.!

Default Image

10,000 வருடங்கள் பழமையான அறிய வகை மாமூத் உயிரினத்தின் எலும்புக்கூடானது ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது.

கம்பளி மாமூத் : ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள யமல் தீபகற்பத்தில் கம்பளி மாமூத் ( woolly mammoth )உயிரினத்தின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கம்பளி மாமூத் உயிரினமானது யானை வகையை சேர்ந்த Elephantidae குடும்பத்தை சேர்ந்தது.

10,000 வருடங்கள் பழமையான எலும்புக்கூடு : இதுகுறித்து, ஆர்க்டிக் ஆராய்ச்சி மைய இயக்குனர் டிமிட்ரி ஃப்ரோலோவ் கூறுகையில், ‘ இந்த அறிய வகை மாமூத் உயிரினத்தின் எலும்புக்கூடானது, 10,000 வருடங்கள் பழமையானது. இதன் வயது, எப்போது உயிரிழந்தது என இன்னும் கணக்கிடப்படவில்லை. அதன் மண்டை ஓட்டின் ஒரு பகுதி, விலா எலும்புகள் மற்றும் முன்கை எலும்புகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. அதன் தந்தங்கள் கண்டறியப்படவில்லை. ‘ என அவர் கூறினார்.

புவி வெப்பமடைதல் : ரஷ்யாவின் பரந்த சைபீரிய பிராந்தியத்தில் இதேபோன்ற கண்டுபிடிப்புகள் அதிகரித்து வரும் வழக்கத்துடன் நிகழ்ந்தன, ஏனெனில் காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பிற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி வேகமான வெப்பமடைந்து வருவதால், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் அதிகமாகிக்கொண்டே வருவது வழக்கமாகி வருவதாக கூறப்படுகிறது.

18,000 ஆண்டுகள் பழமையான நாய்க்குட்டி : இதற்கு முன்னர் டிசம்பர் மாதம்  ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 18,000 ஆண்டுகள் பழமையான நாய்க்குட்டியின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்