தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு….!
இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?
இன்று நாம் நமது நாவுக்கு ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுகிறோமா என்றால், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அந்த வகையில், நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயதுக்கு மீறிய உடலமைப்புடன் தான் இருக்கிறோம். இதனால் உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிகளை தான் நாடுகிறோம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சீரகம்
- இஞ்சி
- எலுமிச்சை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனுள் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் தோல் சீவிய இஞ்சியை துருவி அதனுள் போட வேண்டும். பின் நன்கு கொதிக்க விட வேண்டும். பின், அதனை இறக்கி, அதனுள் எலுமிச்சை வெட்டி போட்டு மூடி வைக்க வேண்டும்.
நன்மைகள்
இந்த தண்ணீரில் உள்ள ஆற்றல் நமது உடல் எடையை குறைத்து, உடல் எடை அதிகரிக்க காரணமான கொழுப்பை கரைக்கிறது. இதனால், நமது உடல் எடை குறைவதோடு, தொப்பையையும் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த பானம் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.