கார சாரமான பாகற்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பாகற்காயில் நிரம்பியுள்ளது. இடது நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.இந்த பதிப்பில் பாகற்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் பெரியது -3
பூண்டு – 1ஸ்பூன் (அரைத்தது)
கடலைமாவு -4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தயிர் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
அரிசி மாவு -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பாகற்காயை வட்டவட்டமாக வெட்டி மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்.அதில் உள்ள கசப்பு போனவுடன் தண்ணீரை வடித்து பின்பு அதில் கடலை மாவு,அரிசிமாவு ,உப்பு ,மிளகாய்த்தூள் ,பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பாகற்காயை போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சூடான சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி.