அசத்தலான சிவப்பு அரிசி தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?
சிவப்பு அரிசி பொதுவாக நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த பதிப்பில் நாம் சிவப்பு அரிசி தோசை என்பதை பற்றி படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி – 1 கப்
உளுந்து -1/2 கப்
உப்பு -தேவையான அளவு
வெந்தயம் -கால் ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அரிசியை தனியே ஊற வைக்கவும்.பின்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியே எடுத்து 4 மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு இந்த மாவுடன் உப்பு நன்றாக கலக்கி 4 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு புளித்தவுடன் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி கொள்ளவும். தோசையை சூற்றிலும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இப்போது சூடான சிவப்பு அரிசி தோசை தயார்.