பெண்கள் நாட்டின் கண்கள்….!!!
- பெண்களின் வாழ்க்கையைபாதிக்கும்சமூகசீர்கேடுகள்.
- பல தடைகளை தாண்டி சாதனை படைக்கும் பெண்கள்.
பெண் என்பவள் பெருமைக்குரியவள். ஆனால் இன்றைய சமூகம் பெண்களை விளம்பர பொருளாக தான் பார்க்கின்றனர். இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பெண்களின் வாழ்வில் சந்தோசமான, நிம்மதியான விடியல் பிறக்கும்.
நமது முன்னோர்களின் காலத்தில் பெண் தைரியம் இல்லாதவள் என்ற எண்ணத்தோடு அவளை வீட்டிலேயே முடக்கி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என, அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கல்வி கண்கள் குருடாக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில், ஆண்களை விட பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் என்னும் படிக்கட்டுகளில் ஏறினாலும், அந்த படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட சில சமுதாய சீர்கேடுகள் தயாராக உள்ளது.
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் காட்டுவதில் எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை.
அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
ஆனால், இதையும் தாண்டி, பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வலம் வருகிறவர்களுக்கு உண்டு. பல தடைகளை தாண்டி சாதனை படைக்கும் பெண்களின் வாழ்க்கையில் விரைவில் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை பதிவிடுகிறோம். .