ஆண்களைப் போலவே பெண்களும் மண்ணைக் காப்பார்கள் -துப்பாக்கியுடன் உக்ரைன் பெண் எம்.பி..!
நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள் என உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே 3-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் உக்ரைனில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆயுதங்களை கொண்டு ரஷிய படைகளுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், எம்.பி. கிரா ருடிக் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
எம்.பி. கிரா ருடிக் தனது ட்விட்டரில், “நான் ஆயுதங்களைத் தாங்கத் தயாராகவும் கற்றுக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு அது என் நினைவுக்கு வரவே இல்லை என மிக யதார்த்தமாகத் தெரிகிறது. நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள்” என தெரிவித்தார்.
I learn to use #Kalashnikov and prepare to bear arms. It sounds surreal as just a few days ago it would never come to my mind. Our #women will protect our soil the same way as our #men. Go #Ukraine! ???????? pic.twitter.com/UbF4JRGlcy
— Kira Rudik (@kiraincongress) February 25, 2022