நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
தங்கத்தின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெண்கள் நகை வாங்குவதை விடுவதில்லை. அதிகமான விலை கொடுத்து வாங்கும், அந்த நகைகளை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் தினமும் அணிந்து கொள்ளும் செயின், கம்மல், மூக்குத்தி போன்ற பொருட்களில் எளிதில் அழுக்குகள் படிந்து விடும். எனவே இவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது சுத்தமான சோப்பால் தேய்த்து தூய்மையான நீரில் சுத்தப்படுத்த வேண்டும். வெளியில் சென்றால் அல்லது விசேஷ வீடுகளுக்கு சென்றால் மட்டும் உபயோகப் படுத்தக்கூடிய ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை நாம் அலமாரியில் வைக்கும்போது ஒன்றோடு ஒன்று உரசாமல் வளையாமல் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டி தனித்தனியாக வைத்துக்கொள்வது நல்லது.
பெண்களைப் பொறுத்தவரையில் முத்துக்கள், கற்கள் பதித்த நகைகளை தான் விரும்பி வாங்குவது உண்டு. அவ்வாறு முத்துக்கள், கற்கள் பதித்த நகைகளை வாங்கும் போது நீரில் சுத்தம் செய்வது வழக்கம். அப்படி சுத்தம் செய்தால் அப்படிப்பட்ட நகைகளை மிகவும் அழுத்தி கழுவாமல், மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும்.
தங்க நகைகள் என்றில்லாமல், வெள்ளி பொருட்களையும் நாம் வாங்குவது உண்டு. தங்கத்திற்கு அடுத்தபடியாக பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் வெள்ளிப் பொருட்கள். இவற்றை இரும்பு பீரோவில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் வெள்ளி பொருட்கள் கறுத்துப் போகாமல் பளபளப்பாக இருக்கும்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…