இரவு முறையாக உறங்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனையே வராதாம்!

Default Image

இரவு நேரத்தில் நன்கு தூங்க கூடிய பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனை வராதாம்.

தூக்கம் மற்றும் பெண்களுக்கான பாலியல் செயலிழப்பு  ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் மிட்லைஃப் எனும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தூக்கம் மற்றும் பாலியல் செயல்பாடு பிரச்சினைகள் இரண்டும் பொதுவானவை என கூறப்பட்டுள்ளது. மிட் லைஃப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மிட் லைஃப்  என்பது பெண்களின் நடுத்தர வயதில் அவர்களுக்கு ஏற்படக்கடிய பிரச்சினை. அதாவது 35 வயது முதல் 55 வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை .இந்த நடுத்தர கால கட்டத்தில் தங்கள் கணவன் மனைவிக்கு இடையேயான நாட்டம் குறைந்து, எப்பொழுதும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் ஆகவே இருப்பார்களாம்.

இவர்கள் இருவருக்கும் இடையே வாழ்க்கையில் அடிக்கடி மனகசப்பு ஏற்படுவதுட ன் தங்கள் செல்லக் கூடிய இடங்களிலும், தங்களுடன் இணைந்து வேலை பார்க்கக் கூடியவர்கள் மீதோ ஒரு நாட்டத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தாங்கள் அவர்களுக்கு அழகானவர்களாக தெரிய வேண்டும் அல்லது அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பல காரணங்களை செய்யலாம். இது நிச்சயம் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ வலிமிகுந்த காலங்களாக தான் அமையும். ஆனால், அதற்கு முந்தைய காலத்தில் நல்ல இரவு நேர தூக்கத்தை அனுபவிக்கக்கூடிய பெண்களுக்கு இந்தப் பிரச்சனை வராது என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு தூக்கமின்மையும் அதிகம் ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு 35 முதல் 55 வயதிலான மிட் லைஃப் காலம் மற்றும் மாதவிடாய் நிற்க கூடிய காலம் இந்த இரண்டு காலங்களிலும் தூக்கப் பிரச்சினைகள் அதிக அளவில் காணப்படும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் அதற்கு முன்பாக உள்ள காலகட்டத்தில் இரவு நேரத்தில் நல்ல முறையில் தூங்கி எழுந்தாலே போதும் என கூறப்படுகிறது. மேலும் நன்றாக தூங்கியவர்கள் இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் இந்த பிரச்சினை அனுபவிக்க மாட்டார்கள் எனக் கூறினாலும் ஒழுங்காக தூங்குபவர்களுக்கு தான் இந்த பிரச்சினை வரும் என்றும் கிடையாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்