ரூ.500-க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்க வைத்த பெண்கள்..!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவது உண்டு. இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்டுத்தி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளன்ர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது ரூ.500 குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், குழந்தைகளை காசு கொடுத்து வாடகைக்கு வாங்கி பிச்சையெடுத்து தெரிய வைத்தது. மேலும், இப்படிப்பட்ட குழந்தைகள் 8 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.