ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட அனுமதியில்லை -தலிபான் அதிரடி..!

Published by
murugan

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலிபான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும்  நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தலிபான்கள் தங்கள் வசப்படுத்தினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். விளையாட்டு என்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படவில்லை என்று கூறினார்.

பெண்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியம் இல்லை, கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலையை அவர்கள் சந்திக்க நேரிடும். பெண்களை இப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளில், பெண்களுக்கு இஸ்லாமிய ஆடை கட்டுப்பாடு கிடைக்காது. அவர்கள் வெளிப்படையாக வெளிப்படுவார்கள் மற்றும் ஆடைகட்டுப்பாட்டை பின்பற்ற மாட்டார்கள், இஸ்லாம் அதை அனுமதிக்காது.

நாங்கள் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம் என்று வசிக் கூறினார். ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி, விளையாட்டு ஒரு தேவையாக கருதப்படவில்லை, என்றார். இந்த வார தொடக்கத்தில், தலிபான் பெண் ஆசிரியர் மட்டுமே ஆப்கானிஸ்தானில் பெண் மாணவர்களுக்கு கற்பிப்பார் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானின் தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் (முழு நீள உடை) மற்றும் நிகாப் (முகத்தை மறைக்கும் ஆடை) அணிய வேண்டும். வகுப்புகள் ஆண், பெண் போன்ற பாலினத்தால் பிரிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒரு திரைச்சீலை மூலம் ஆண்,பெண் என வகுப்புகள் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

35 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

21 hours ago