பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.!
பெலாரஸ் அரசை கண்டித்து அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை பதவி விலக வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலாரஸில் கடந்த 9ம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 6வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்ந நிலையில் அலெக்சாண்டர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் கடந்த சில வாரங்களாக அலெக்சாண்டரை அதிபர் பதவியில் இருந்து விலக கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் ஊடகங்களில் பெலாரஸில் பெண்கள் நடத்தும் போராட்டங்களை குறித்து தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் பெலாரஸ் அரசு பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தற்போது தலைநகரில் பெண்கள் பலூன்கள், பூக்கள் மற்றும் கொடிகளுடன் பெலாரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அணி வகுப்பு நடத்தியுள்ளனர்