ஜென் கேமின் கன்சோல் வீடியோ கேமுக்காக வடகரோலினாவில் இரு பெண்கள் அடித்துக் கொண்டு மோசமாக சண்டையிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வடக்கு கரோலினாவில் உள்ள வால்மார்ட் பகுதியில் ps5 வீடியோ கேம் கன்சோலுக்காக இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கேம்களின் தேவை வட கரோலினாவில் மிக அதிகமாக இருக்கிறதாம். ஆனால் குறைந்த அளவு மட்டுமே இது கிடைப்பதால் மக்கள் அவற்றை சண்டையிட்டும் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வீடியோ கேம் கன்சோல் வாங்க வந்திருந்த இரு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக முற்றி உள்ளது. அதில் இரு பெண்களும் மோதிக்கொண்டதில் ஒருவர் மற்றொரு பெண்ணை மிக கொடூரமாக அடித்து தரையில் படுக்க வைத்து விடுகிறார். மிகக் கொடூரமாக சண்டையிட்டுக் கொண்ட அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அதன் பின் இறுதியாக ஒருவர் வந்து அடிக்கும் பெண்ணை இழுக்க, ஆடி வாங்கிய பெண் தரையிலேயே விழுந்து விடுகிறார். தரையோடு தரையாக அப்படியே படுத்து கிடக்கிறார், அவரது நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் வீடியோ கேமுக்காக இப்படி சண்டையிட்டுக் கொள்வார்களா என வியப்பாக உள்ளது. இதோ அந்த வீடியோ,
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…