அடிமை தனத்தை அடியோடு அளிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள்….!!!
- அடிமை தனத்தை அடியோடு அளிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள்.
- விரைவில் பெண்களின் வாழ்வில் விடியல் பிறக்கும்.
பெண்கள் அடிமையாக இருக்க பிறந்தவர்கள் இல்லை. ஆள பிறந்தவர்கள். பெண்ணடிமைத்தனம் என்பது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறது.
சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக அமையவில்லை. பல சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு பணி செய்யும் அல்லது ஆண்களின் கட்டுப்பாடுகளுக்குரிய அல்லது ஆண்களை சார்ந்து இருக்கும் மனிதர்களாகவே அடிமைத் தனமாக பயன்படுத்தப்பட்டார்கள். சுதந்திரங்கள் அற்றவர்களாகவும், ஆண் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலையை பெண்ணடிமைத் தனம் எனலாம்.
பெண்களுக்கு சொத்துரிமை, கல்வியுரிமை, வேலையுரிமை, பேச்சுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் இருக்கவில்லை. பல வழிமுறைகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.
பெண் விடுதலைப்பற்றி பேசுபவர்களும் எழுதுபவர்களும் கூட சுயவாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள், பெண் அடிமை ஆவதற்குப் போடப்பட்ட முதல் அடி நீர், நிலம் கால்நடைகள் போன்ற இயற்கை வளங்கள் ஆண்களின் வசமானது. இயற்கை வளங்கள் ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பெண் இப்போது ஆணுக்கு சொந்தமான பொருள்களில் ஒன்றாகி போனாள் உடைமை ஆகிப் போனாள்.
சமயத்தின் பெயரால் ஆண்கள் புதுப்புது விதிமுறைகளை உருவாக்கினர். அவை பெண்களுக்கு எதிராக அமைந்தன. இந்த விதிகளை வலியுறுத்த இலக்கியங்களை உருவாக்கினர்.
மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டவள். அவளுக்கு கற்பு உயிரைவிடப் பெரியது. கணவனுக்காக மனைவி தியாகங்கள் செய்ய கடமைப்பட்டவள். கணவனை இழந்த பெண் விதவையாகவே காலம் தள்ள வேண்டும். விதவைகள் மீண்டும் திருமணம் செய்யக்கூடாது. இப்பிடி பல வழிகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர்.
விரைவில் பெண்களின் வாழ்வில் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை பதிவிடுகிறோம்.