பெண்கள் நம்நாட்டின் கண்கள் ! மாறுமா பெண்களின் நிலை ?

Default Image

பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு  இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை. மேலும் இன்னும் பல கிராமங்களிலும் பெண்களை அடிமைபடுத்தி அவர்களை துன்புறுத்தும் ஆண்கள் சமுதாயம் இருந்து தான் வருகிறது.முன்றைய காலகட்டத்தில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று பெண்களின் கல்விஉரிமை மறுக்கபட்டது. பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட பல தலைவர்களும் அரும்பாடுபட்டனர்.

ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பெண்கல்வி போற்றபட்டு வருகிறது. மேலும் பெண்கள் சாதிக்காத துறைகளே இருக்க முடியாது.குடும்பத்தில் மிக முக்கிய அங்கமாக விளங்குவது பெண்களே.எனவே தான் பெண்கள் நம்நாட்டின் கண்கள் என்று அனைவரும் அழைக்கிறார்கள். ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை. மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலக வருமானத்தில் 10 சதவிகித விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள். வீட்டில் இருக்கும்  பெண்கள் ஊதியமற்ற வீட்டுவேலையில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அவர்கள் ஊதியம் பெறும் வேலைக்கு செல்ல முடிவதில்லை இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம் தான் பெறமுடிகிறது. மேலும் பெண்கள் வேலைக்கு சென்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.  சமுதாயத்தில் பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே ஊதியம் பெறும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார்கள். மேலும் அவர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை பதிவிடுகிறோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray