செல்போனை சார்ஜில் போட்டு விட்டு பயன்படுத்திய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் !
கஜகஸ்தானின் பாஸ்டோப் கிராமத்தில் ஆலுவா அஸெட்க்கிஸி என்ற 14 வயது சிறுமி வசித்து வந்தார். இசை கேட்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று செல்போனை சார்ஜில் போட்டவாரே பாடலை கேட்டு கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிக நேரம் சார்ஜ் ஏறியதால் பேட்டரி சூடாகி வெடித்தது.அப்போது சிறுமியின் தலையிலும் மிக பெரிய காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.உடனே தடவியல் ஆய்வாளர்கள் வைத்து நடத்திய சோதனையில் செல்போன் அதிகாலையில் பேட்டரி சூடேறியதால் வெடித்ததாகவும் கூறியுள்ளார்கள்.மேலும் செல்போன் அந்த சிறுமியின் அருகில் இருந்ததால் தான் சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.வெடித்தது எந்த நிறுவனத்தின் செல் போன் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.