மூட நம்பிக்கை காரணமாக விமானத்தை நோக்கி நாணயத்தை வீசிய பெண்ணுக்கு போலீசார் அபராதம் !

Default Image

சீனாவில் நான்சங்கில் எனும் ஊரை சேர்ந்தவர் வாங். 23 வயதாகும் இந்த பெண் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளார். சீனாவில் உள்ள கோவில் மணி பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன்பு நாணயங்களை வீசினால் அது தீயத்தையும் , நோயையும் விரட்டி நன்மை தரும் என அந்த நாட்டு மக்கள் நம்பி வருகிறார்கள்.

இந்நிலையில் வாங் சொந்த ஊரான நான்சங்கீல்  இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் வந்தார்.இவர் விமான நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் விமானத்தின் எஞ்சினை பார்த்து 3 நாணயங்களை வீசி எறிந்தார்.

உடனே இவரை விமான நிலையத்தில் இருந்த காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் சகோதரியின் மகன் நலம் பெற வீசியதாக கூறியுள்ளார்.மேலும் இது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.உடனே அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க பட்டது. இந்த நாணயங்களை பார்க்காமல் போய் இருந்தால் அது கற்பனைக்கும் எட்டாத பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று அதிகாரிகள் அந்த பெண்ணை எச்சரித்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்