2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிசில் உள்ள போர்க்-லா- ரெய்ன் என்ற தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவ கோப்புகளில் இருந்து, ஒரு பெண்ணின் நம்பரை எடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறி குறுந்தகவல்களை அனுப்பியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் வெப்கேமுக்கு முன்னால், ஆடை இன்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்பெண்ணும் அந்த வீரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதை செய்துள்ளார். பின்பு எனது எண்ணை அவரது மற்ற வீரர்களுக்கும் அனுப்பினார். மற்ற தீயணைப்பு வீரர்களும் அவரை அதுபோலவே செய்யச் சொல்லியதாக குற்றம்சாட்டியுள்ளார். 2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 3 பேர் மீது மட்டுமே பாலியல் மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது. ஆனால் யார் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரையில், பாலியல் மீறலுக்கான அதிகபட்ச தண்டனை 7 வருடமும், பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். இந்தப் பெண் தனது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபிக்க 10 ஆண்டுகள் ஆன நிலையில், அப்பெண்ணுக்கு நீதிகோரி தற்போது பல பெண்ணிய குழுக்கள் பாரிஸின் தெருக்களில் போராடத் தொடங்கியுள்ளனர்.
இதில் இந்த வழக்கானது பிரான்சின் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், மூன்றுபேர் பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததால் இது பாலியல் வன்கொடுமை அல்ல என்று கூறியுள்ளனர். இது பிரான்சில் உள்ள பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…