லண்டனில் டாக்மர் டர்னர் என்ற 50 வயது பெண் வயலின் இசை கலைஞர் உள்ளார்.இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது.அப்போது அவரின் மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த கட்டி இடது கையின் செயல் திறனை கட்டுப்படுத்தும் என்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்தால் தனது வயலின் வாசிக்கும் திறன் இழந்துவிடலாம் என எண்ணி டாக்மர் அறுவை சிகிச்சையை தவிர்த்து வந்துள்ளார்.இந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் டாக்மருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிசையில் தனது வயலின் இசை திறமை தன்னை விட்டு சென்றால் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என டாக்மர் கூறினார்.
இதையெடுத்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன் இந்த அறுவை சிகிச்சையால் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை கூறினார்.அதன்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்த போது மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார்.
அவர் வயலின் வசித்தபோது மருத்துவர்கள் தலையை பிளந்து சிறு சிறு கட்டிகளை அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அறுவை சிகிச்சை செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு டாக்மர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.
அறுவை சிகிக்சை குறித்து டாக்மர் கூறுகையில் , நான் 10 வயதில் இருந்து வயலின் வாசித்து வருகிறேன். இந்த அறுவை சிகிக்சையில் என்னுடைய வயலின் வாசிப்பு திறன் இழந்திருந்தால் என் இதயம் நொறுங்கி இருக்கும் ” என கூறினார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…