ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அறிவிப்பு!

Default Image

ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயது பெண் அரோரா ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஐநா வளர்ச்சித் திட்ட தணிக்கை ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயதுடைய பெண்மணி தான் அரோரா அகாங்சா. ஐநாவின் பொது செயலாளர் பதவியில் இருந்த அன்றானியா குட்டரசின் என்பவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இருப்பினும் அவரது பொது செயலாளர் பதவிக்கு போட்டிகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அவர்கள் ஐநா பொதுச்செயலாளர் பதவியில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அரோரா செக்ரட்டரி ஜெனரல் எனும் ஹாஸ்டேக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு தனக்கான பிரச்சாரத்தையும் இப்பொழுதே துவங்க ஆரம்பித்துள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்