45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றார்..!

Default Image

45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 நிமிடங்களுக்கு மருத்துவ ரீதியாக இறந்த ஒரு பெண் தன் மகளுக்கு குழந்தை பிறக்கும் முன்பே மீண்டும் உயிர்பெற்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த கேத்தி பாட்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவருக்கு வாழ்க்கையில்  மீண்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேத்தி கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அவள் மகள் ஸ்டேசி ஃபைபர் பிரசவத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் கேத்தி தனது மகளுடன் இருக்க மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாட்டியாக காத்திருந்த கேத்திக்கு உடனடியாக அவசர சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிபிஆர் முயற்சித்து ஆக்ஸிஜனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து 45 நிமிடங்களுக்கு மூளை, இதய துடிப்பு, இரத்த அழுத்தம் அல்லது ஆக்ஸிஜன் போன்ற எதுவும் செயலில் இல்லை. இந்த செயல்கள் அனைத்தும் கேத்தி மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதைக் காட்டியுள்ளது. அதே நேரத்தில், ஸ்டேசி அவசர சி-பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் பின்பு முதல் அதிசயம் நடந்துள்ளது. மருத்துவர்கள் கேத்தியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 22 அன்று நடந்தது.

இந்த நிகழ்விற்கு பிறகு கேத்தி தெரிவித்துள்ளதாவது, எனக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்னால் முடிந்த மிகச்சிறந்த நபராக இருப்பேன். திரும்பி வருவது வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்பு, அது நினைத்து பார்த்தாலே திகிலூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

கேத்தி உயிர் பெற்ற சிறிது நேரம் கழித்து, ஸ்டேசி குழந்தை அலோராவைப் பெற்றெடுத்துள்ளார். இது குறித்து ஸ்டேசி, என் அம்மா இங்கே இருக்க வேண்டுமென்பது விதிதான். என் அம்மா அலோராவால் இன்று இங்கே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேத்திக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் டோவ் ஃபிராங்கெல், அன்று அங்கு நிகழ்ந்த சம்பவங்களினால் ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த நிகழ்வை குறித்து அவர், வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த சம்பவம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. ஒருபோதும் முயற்சியை கைவிடாததன் அர்த்தத்தை இது எங்களுக்குக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்