வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தலைவர் பேட்டி.
கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.
இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை தொடர்பில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பீகார் மாநில அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பேட்டி
இந்த நிலையில், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால், கட்டுமான தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக அரசு சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…